மணிமேகலை 3241 - 3260 of 4856 அடிகள்

மணிமேகலை 3241 - 3260 of 4856 அடிகள் 

manimegalai

3241. இந்திரன் மருமான் இரும் பதிப் புறத்து ஓர்
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து
ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி
'இந் நகர்ப் பேர் யாது? இந் நகர் ஆளும்
மன்னவன் யார்?" என மாதவன் கூறும்
'நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன்
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன்
ஈங்கு இவன் பிறந்த அந் நாள் தொட்டும்
ஓங்கு உயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்

விளக்கவுரை :

[ads-post]

3251. உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல்' என
தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன்
அகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன் தான் என்

25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை

அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து
தருமசாவகன் தன் அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல் உயிர்ப் புக்கிலும்
சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு
'பெண் இணை இல்லாப் பெரு வனப்பு உற்றாள்

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books