மணிமேகலை 2481 - 2500 of 4856 அடிகள்
2481. காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள்
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இவ்
வம்பலன் தன்னொடு இவ் வைகு இருள் ஒழியாள்
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து
வந்து அறிகுவன்' என மனம் கொண்டு எழுந்து
வான்தேர்ப் பாகனைப் மீன் திகழ் கொடியனை
கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை
உயாவுத் துணையாக வயாவொடும் போகி
ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து
விளக்கவுரை :
[ads-post]
2491. வேழம் வேட்டு எழும் வெம் புலி போல
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆய் இழை இருந்த அம்பலம் அணைந்து
வேக வெந் தீ நாகம் கிடந்த
போகு உயர் புற்று அளை புகுவான் போல
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன்
'ஈங்கு இவன் வந்தனன் இவள்பால்' என்றே
வெஞ் சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத்
விளக்கவுரை :
மணிமேகலை 2481 - 2500 of 4856 அடிகள்
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books