மணிமேகலை 3301 - 3320 of 4856 அடிகள்

மணிமேகலை 3301 - 3320 of 4856 அடிகள் 

manimegalai

3301. இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை
மாற்று அருங் கூற்றம் வருவதன் முன்னம்
போற்றுமின் அறம்' எனச் சாற்றிக் காட்டி
நாக் கடிப்பு ஆக வாய்ப் பறை அறைந்தீர்
அவ் உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த
வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்
"பெரியவன் தோன்றாமுன்னர் இப் பீடிகை
கரியவன் இட்ட காரணம் தானும்
மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய
என் பிறப்பு உணர்த்தலும் என்?" என்று யான் தொழ

விளக்கவுரை :

[ads-post]

3311. "முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது
மற்று அப் பீடிகை தன்மிசைப் பொறாஅது
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது
வானவன் வணங்கான் மற்று அவ் வானவன்
பெருமகற்கு அமைத்து 'பிறந்தார் பிறவியைத்
தரும பீடிகை சாற்றுக' என்றே
அருளினன் ஆதலின் ஆய் இழை பிறவியும்
இருள் அறக் காட்டும்" என்று எடுத்து உரைத்தது
அன்றே போன்றது அருந் தவர் வாய்மொழி
இன்று எனக்கு' என்றே ஏத்தி வலம் கொண்டு

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books