மணிமேகலை 2181 - 2200 of 4856 அடிகள்
2181. இடங்கழி காமமொடு அடங்காண் ஆகி
'உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என்
நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி
நோற்றூண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்? என
தானே தமியள் நின்றோள் முன்னர்
யானே கேட்டல் இயல்பு' எனச் சென்று
'நல்லாய்! என்கொல் நல் தவம் புரிந்தது?
சொல்லாய்' என்று துணிந்துடன் கேட்ப
'என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன்
விளக்கவுரை :
[ads-post]
2191. தன் அடி தொழுதலும் தகவு!' என வணங்கி
'அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும்
தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல்
நன்றி அன்று!' என நடுங்கினள் மயங்கி
'கேட்டது மொழியேன் கேள்வியாளரின்
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின்
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
விளக்கவுரை :
மணிமேகலை 2181 - 2200 of 4856 அடிகள்
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books