மணிமேகலை 2141 - 2160 of 4856 அடிகள்

மணிமேகலை 2141 - 2160 of 4856 அடிகள்

manimegalai

2141. உளம் கொண்டு ஒளித்தாள் உயிர்க் காப்பிட்டு" என்று
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர்ப்
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றிச்
செங்கோல் காட்டிச் "செய் தவம் புரிந்த
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்" என்றனள்
தெய்வம்கொல்லோ? திப்பியம்கொல்லோ?
எய்யா மையலேன் யான்! என்று அவன் சொலச்
சித்திராபதி தான் சிறு நகை எய்தி
'அத் திறம் விடுவாய் அரசு இளங் குருசில்!
காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன

விளக்கவுரை :

[ads-post]

2151. தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின்?
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி
ஆயிரம் செங் கண் அமரர் கோன் பெற்றதும்
மேருக் குன்றத்து ஊரும் நீர்ச் சரவணத்து
அருந் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய
பெரும் பெயர்ப் பெண்டிர்பின்பு உளம் போக்கிய
அங்கி மனையாள் அவரவர் வடிவு ஆய்த்
தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம்
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில்?
கன்னிக் காவலும் கடியின் காவலும்

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books