மணிமேகலை 2881 - 2900 of 4856 அடிகள்
2881. வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப
'தீது இன்று ஆக செங்கோல் வேந்து!' என
மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்
'முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில்
கடியப் பட்டன ஐந்து உள அவற்றில்
கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளாது ஆகும் காமம் "தம்பால்
ஆங்கு அது கடிந்தோர் அல்லவை கடிந்தோர்" என
நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள்
நீங்கார் அன்றே நீள் நில வேந்தே!
விளக்கவுரை :
[ads-post]
2891. தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்
சே அரி நெடுங் கண் சித்திராபதி மகள்
காதலன் உற்ற கடுந் துயர் பொறாஅள்
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்
மற்று அவள் பெற்ற மணிமேகலை தான்
முற்றா முலையினள் முதிராக் கிளவியள்
"செய்குவன் தவம்" என சிற்றிலும் பேர் இலும்
ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள்
ஆங்கு அவள் அவ் இயல்பினளே ஆயினும்
நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும்
விளக்கவுரை :
மணிமேகலை 2881 - 2900 of 4856 அடிகள்
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books