மணிமேகலை 2981 - 3000 of 4856 அடிகள்
2981. 'தேவி வஞ்சம் இது' எனத் தெளிந்து
நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி
ஆண்மைக் கோலத்து ஆய் இழை இருப்ப
காணம் பெற்றோன் கடுந் துயர் எய்தி
'அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார்
நிரயக் கொடு மகள் நினைப்பு அறியேன்' என்று
அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின்
'மகனை நோய் செய்தாளை வைப்பது என்?' என்று
'உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள்' என
பொய்ந் நோய் காட்டிப் புழுக்கறை அடைப்ப
விளக்கவுரை :
[ads-post]
2991. ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த
வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப
ஐயென விம்மி ஆய் இழை நடுங்கி
செய் தவத்தாட்டியைச் சிறுமை செய்தேன்
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன் நேர் அனையாய்! பொறுக்க" என்று அவள் தொழ
'நீலபதி தன் வயிற்றில் தோன்றிய
ஏலம் கமழ் தார் இராகுலன் தன்னை
அழற்கண் நாகம் ஆர் உயிர் உண்ண
விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள்
விளக்கவுரை :
மணிமேகலை 2981 - 3000 of 4856 அடிகள்
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books