மணிமேகலை 1861 - 1880 of 4856 அடிகள்

மணிமேகலை 1861 - 1880 of 4856 அடிகள்

manimegalai

1861. சூடிய மாலையும் தொல் நிறம் வழாது
விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்பத்
"தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன்
யாது செய்கேன்?" என்று அவள் ஏங்கலும்
"ஆதிரை! கேள் உன் அரும் பெறல் கணவனை
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன்
சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன்

விளக்கவுரை :


[ads-post]

1871. வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்
நின் பெருந் துன்பம் ஒழிவாய் நீ" என
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்
ஐ அரி உண் கண் அழு துயர் நீங்கி
பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று
மனம் கவல்வு இன்றி மனைஅகம் புகுந்து "என்
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக!" என
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம்
அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்
விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books