மணிமேகலை 1721 - 1740 of 4856 அடிகள்

மணிமேகலை 1721 - 1740 of 4856 அடிகள்

manimegalai

1721. தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன்
"இழிந்தோன் ஏறினன்" என்று இதை எடுத்து
வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும்
வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்
"மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம்
என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்
தவம் தீர் மருங்கின் தனித் துயர் உழந்தேன்
சுமந்து என் பாத்திரம்?" என்றனன் தொழுது
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின்

விளக்கவுரை :


[ads-post]

1731. "ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று" என விடுவோன்
"அருள் அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர்
உளர்எனில் அவர் கைப் புகுவாய்" என்று ஆங்கு
உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்ப்புழி
அந் நாள் ஆங்கு அவன் தன்பால் சென்றேன்
"என் உற்றனையோ?" என்று யான் கேட்பத்
தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்
குண திசைத் தோன்றி கார் இருள் சீத்துக்
குட திசைச் சென்ற ஞாயிறு போல
மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books