மணிமேகலை 1701 - 1720 of 4856 அடிகள்

மணிமேகலை 1701 - 1720 of 4856 அடிகள்

manimegalai

1701. நடவை மாக்களும் நகையொடு வைகி
வட்டும் சூதும் வம்பக் கோட்டியும்
முட்டா வாழ்க்கை முறைமையது ஆக
ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி
ஊரூர் தோறும் உண்போர் வினாஅய்
"யார் இவன்?" என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு
அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை
"இருந்தாய் நீயோ!" என்பார் இன்மையின்
திருவின் செல்வம் பெருங் கடல் கொள்ள 14-070
ஒரு தனி வரூஉம் பெருமகன் போல

விளக்கவுரை :

[ads-post]

1711. தானே தமியன் வருவோன் தன்முன்
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
"சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின்
ஊன் உயிர் மடிந்தது உரவோய்!" என்றலும்
"அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது
குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி
அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து" என
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி
கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின்
மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்துத்

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books