மணிமேகலை 1181 - 1200 of 4856 அடிகள்
1181. பொலம் கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி
'உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்
என் பெருங் கணவன் யாங்கு உளன்?' என்றலும்
'இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு
புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின்
இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி
சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்
தெரு மரல் ஒழித்து ஆங்கு இரத்தினத் தீவத்துத்
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
விளக்கவுரை :
[ads-post]
1191. வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின்
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி
மெல் இயல்! கண்டனை மெய்ந் நடுக்குற்றனை
நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச
இராகுலன் "வந்தோன் யார்?" என வெகுளலும்
விரா மலர்க் கூந்தல்! அவன் வாய் புதையா
"வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது
நா நல்கூர்ந்தனை" என்று அவன் தன்னொடு
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு
"அமர! கேள் நின் தமர் அலம் ஆயினும்
விளக்கவுரை :
மணிமேகலை 1181 - 1200 of 4856 அடிகள்
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books