மணிமேகலை 1161 - 1180 of 4856 அடிகள்
1161. பாங்கில் தோன்றி 'பைந்தொடி! கணவனை
ஈங்கு இவன்' என்னும்" என்று எடுத்து ஓதினை
ஆங்கு அத் தெய்வதம் வாராதோ?" என
ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என்
10. மந்திரம் கொடுத்த காதை
'அறவோன் ஆசனத்து ஆய் இழை அறிந்த
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது' என
விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து
பொரு அறு பூங் கொடி பூமியில் பொலிந்தென
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம்
முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப
விளக்கவுரை :
[ads-post]
1171. 'உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி
பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து அறிவு இழந்த
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்கச்
சுடர் வழக்கு அற்றுத் தடுமாறுகாலை ஓர்
இள வள ஞாயிறு தோன்றியதென்ன
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன்
நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம்
நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன்
பூமிசை ஏற்றினேன் புலம்பு அறுக" என்றே
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்ப்
விளக்கவுரை :
மணிமேகலை 1161 - 1180 of 4856 அடிகள்
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books