சிலப்பதிகாரம் 4881 - 4900 of 5288 அடிகள்
4881. கடவுள் மங்கலம் செய்கென ஏவினன்
வடதிசை வணக்கிய மன்னவ ரேறென்.
31. வாழ்த்துக் காதை
உரைப் பாட்டு மடை
குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட
சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன்மகளீன்ற
மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்
யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி
வஞ்சியுள் வந்திருந்த காலை, வட ஆரிய மன்னர் ஆங்
கோர் மடவரலை மாலைசூட்டி உடனுறைந்த இருக்கை
தன்னில் ஒன்றுமொழி நகையினராய்த் தென்றமிழ் நாடா
ளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின்றவழும்
விளக்கவுரை :
[ads-post]
4891. இமய நெற்றியில் விளங்கு வில் புலி கயல் பொறித்த
நாள் எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லை போலும் என்ற
வார்த்தை அங்குவாழும் மாதவர் வந்தறிவுறுத்தவிடத்
தாங்கண் உருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டு
துரந்ததுபோல் இமயமால்வரைக் கற்கடவுளாமென்ற
வார்த்தை இடந்துரப்ப, ஆரியநாட்டரசோட்டி அவர்
முடித்தலை அணங்காகிய பேரிமயக் கல்சுமத்திப்
பெயர்ந்து போந்து நயந்த கொள்கையிற் கங்கைப்பேர்
யாற்றிருந்து நங்கைதன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந்தரு
வெம்மை நீங்கி வஞ்சிமா நகர்புகுந்து நிலவரசர் நீண்
விளக்கவுரை :
சிலப்பதிகாரம் 4881 - 4900 of 5288 அடிகள்
சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள், silappathikaaram, elango adikal, tamil books