மணிமேகலை 681 - 700 of 4856 அடிகள்

மணிமேகலை 681 - 700 of 4856 அடிகள்

manimegalai

681. அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என்

6. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை


அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்
சான்றோர் தம் கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல
மாசி அறு விசும்பின் மறு நிறம் கிளர
ஆசு அற விளங்கிய அம் தீம் தண்கதிர்
வெள்ளி வெண் குடத்துப் பால் சொரிவது போல்
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடைச் சொரிய

விளக்கவுரை :

[ads-post]

691. உருவு கொண்ட மின்னே போல
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்
ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி
'ஈங்கு நின்றீர் என் உற்றீர்?' என
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்
'அரசு இளங் குமரன் ஆய் இழை தன் மேல்
தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books