மணிமேகலை 581 - 600 of 4856 அடிகள்

மணிமேகலை 581 - 600 of 4856 அடிகள்

manimegalai

581. வட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு
"யாங்கனம் வந்தனை என் மகள்?" என்றே
தாங்காக் கண்ணீர் என் தலை உதிர்த்து ஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிடலீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இந் நகர் மருங்கில்
பரந்து படு மனைதொறும் திரிவோன் ஒரு நாள்
புனிற்று ஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிர மாலை கைக்கொண்டென்ன
நிணம் நீடு பெருங் குடர் கை அகத்து ஏந்தி

விளக்கவுரை :


[ads-post]

591. "என் மகள் இருந்த இடம்" என்று எண்ணி
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
"சமணீர்காள்! நும் சரண்" என்றோனை
"இவன் நீர் அல்ல" என்று என்னொடும் வெகுண்டு
மை அறு படிவத்து மாதவர் புறத்து எமைக்
கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம்
"அறவோர் உளீரோ? ஆரும் இலோம்!" எனப்
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம்
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books