மணிமேகலை 541 - 560 of 4856 அடிகள்
541. இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என்
5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
இளங்கோன் கண்ட இளம் பொன் பூங்கொடி
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப
பொரு முகப் பளிங்கின் எழினி வீழ்த்து
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரை மலர் ஐங் கணை மீன விலோதனத்து
உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்
காவி அம் கண்ணி ஆகுதல் தெளிந்து
தாழ் ஒளி மண்டபம் தன் கையின் தடைஇச்
விளக்கவுரை :
[ads-post]
551. சூழ்வோன் சுதமதி தன் முகம் நோக்கி
'சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன!
எத் திறத்தாள் நின் இளங்கொடி? உரை' என
'குருகு பெயர்க் குன்றம் கொன்றோன்' அன்ன நின்
முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாள் ஆயின் பைந்தொடி நங்கை
ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள்' என்றே
தூ மலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப
'சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ?
விளக்கவுரை :
மணிமேகலை 541 - 560 of 4856 அடிகள்
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books