மணிமேகலை 41 - 60 of 4856 அடிகள்
41. பளிக்கறை புக்க பாவையைக் கண்டு அவன்
துளக்குறு நெஞ்சில் துயரொடும் போய பின்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்
மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும்
உவவன மருங்கின் அவ் உரைசால் தெய்வதம்
சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம்
ஆங்கு அத் தீவகத்து ஆய் இழை நல்லாள்
தான் துயில் உணர்ந்து தனித் துயர் உழந்ததும்
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணிப் பீடிகைப்
பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும்
விளக்கவுரை :
[ads-post]
51. உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
'மனம் கவல் ஒழிக!' என மந்திரம் கொடுத்ததும்
தீபதிலகை செவ்வனம் தோன்றி
மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும்
பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு
யாப்புறு மா தவத்து அறவணர்த் தொழுததும்
அறவண அடிகள் ஆபுத்திரன் திறம்
நறு மலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால்
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்
விளக்கவுரை :
மணிமேகலை 41 - 60 of 4856 அடிகள்
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books