மணிமேகலை 21 - 40 of 4856 அடிகள்

மணிமேகலை 21 - 40 of 4856 அடிகள் 

manimegalai

21. நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு' என
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி
கோள் நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண் தமிழ்ப் பாவை
தொழுதனள் நிற்ப அத் தொல் மூதாட்டி
கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து
தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்
செம்மலர் முதியோன் செய்த அந் நாள்
என் பெயர்ப் படுத்த இவ் விரும் பெயர் மூதூர்

விளக்கவுரை :

[ads-post]

31. நின் பெயர்ப் படுத்தேன் நீ வாழிய! என
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்
ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்குப்
பெரு விழா அறைந்ததும் 'பெருகியது அலர்' என
சிதைந்த நெஞ்சின் சித்திராபதி தான்
வயந்த மாலையான் மாதவிக்கு உரைத்ததும்
மணிமேகலை தான் மா மலர் கொய்ய
அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்
ஆங்கு அப் பூம்பொழில் அரசு இளங் குமரனைப்
பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும்

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books