மணிமேகலை 1901 - 1920 of 4856 அடிகள்

மணிமேகலை 1901 - 1920 of 4856 அடிகள்

manimegalai

1901. "ஈங்கு நீ வந்த காரணம் என்?" என
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்
"அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன்
வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள்
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து
வெங் களும் ஊனும் வேண்டுவ கொடும்" என
அவ் உரை கேட்ட சாதுவன் அயர்ந்து
"வெவ்உரை கேட்டேன் வேண்டேன்" என்றலும்
"பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு
உண்டோ ஞாலத்து உறு பயன்? உண்டுஎனின்

விளக்கவுரை :

[ads-post]

1911. காண்குவம் யாங்களும் காட்டுவாயாக" என
தூண்டிய சினத்தினன் "சொல்" என சொல்லும்
"மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும்
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
'நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும்
உண்டு' என உணர்தலின் உரவோர் களைந்தனர்
கண்டனை ஆக!" என கடு நகை எய்தி

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books