மணிமேகலை 1641 - 1660 of 4856 அடிகள்

மணிமேகலை 1641 - 1660 of 4856 அடிகள்

manimegalai

1641. பூங் கொடி நல்லாய் புகுந்தது கேளாய்
மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து
ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ
துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி
"வயிறு காய் பெரும் பசி மலைக்கும்" என்றலும்
ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன்
ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த
"கேள் இது மாதோ கெடுக நின் தீது" என
யாவரும் ஏத்தும் இருங் கலை நியமத்துத்
தேவி சிந்தாவிளக்குத் தோன்றி

விளக்கவுரை :

[ads-post]

1651. "ஏடா! அழியல் எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இவ் ஓடு வறம் கூராது
வாங்குநர் கைஅகம் வருந்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது" என்றே
தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும்
"சிந்தாதேவி! செழுங் கலை நியமத்து
நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்!
வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி!
ஏனோர் உற்ற இடர் களைவாய்!" எனத்
தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books