மணிமேகலை 1941 - 1960 of 4856 அடிகள்

மணிமேகலை 1941 - 1960 of 4856 அடிகள்

manimegalai

1941. "நன்று சொன்னாய்! நல் நெறிப் படர்குவை
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன்
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின்
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி
மூத்து விளி மா ஒழித்து எவ் உயிர்மாட்டும்
தீத்திறம் ஒழிக!" எனச் சிறுமகன் உரைப்போன்
"ஈங்கு எமக்கு ஆகும் இவ் அறம் செய்கேம்
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க" எனப்
"பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை
உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை

விளக்கவுரை :


[ads-post]

1951. விரை மரம் மென் துகில் விழு நிதிக் குப்பையோடு
இவை இவை கொள்க" என எடுத்தனன் கொணர்ந்து
சந்திரதத்தன் என்னும் வாணிகன்
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி
இந் நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து
தன் மனை நன் பல தானமும் செய்தனன்
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்
பூங் கொடி நல்லாய்! பிச்சை பெறுக!" என
மனைஅகம் புகுந்து மணிமேகலை தான்
புனையா ஓவியம் போல நிற்றலும்

விளக்கவுரை :

மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books