மணிமேகலை 1401 - 1420 of 4856 அடிகள்
1401. தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும்
'பழுது அறு மாதவன் பாதம் படர்கேம்
எழுக' என எழுந்தனள் இளங்கொடி தான் என்
12. அறவணர்த் தொழுத கதை
ஆங்கு அவர் தம்முடன் 'அறவண அடிகள்
யாங்கு உளர்?' என்றே இளங்கொடி வினாஅய்
நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரை மூதாளன் உறைவிடம் குறுகி
மைம் மலர்க் குழலி மாதவன் திருந்து அடி
மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி
புது மலர்ச் சோலை பொருந்திய வண்ணமும்
விளக்கவுரை :
[ads-post]
1411. உதயகுமரன் ஆங்கு உற்று உரைசெய்ததும்
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை
அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும்
ஆங்கு அத் தீவகத்து அறவோன் ஆசனம்
நீங்கிய பிறப்பு நேர் இழைக்கு அளித்ததும்
அளித்த பிறப்பின் ஆகிய கணவனை
களிக் கயல் நெடுங் கண் கடவுளின் பெற்றதும்
'தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
வெவ் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
விளக்கவுரை :
மணிமேகலை 1401 - 1420 of 4856 அடிகள்
மணிமேகலை, சீத்தலைச் சாத்தனார், manimekalai, seethalai saaththanaar, tamil books

