1681. உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ? கற்றறிந்
தீர்எனத்,
தீமொழி கேட்டுச் செவியகம்
புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க,
எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை
முள்உடைக் காட்டின் முதுநரி ஆகெனக்
கவுந்தி இட்ட தவம்தரு சாபம்
கட்டியது ஆதலின், பட்டதை
அறியார்
குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
1691. நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்
செய்தவத் தீர்நும் திருமுன்
பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீ ரோஎன,
அறியா மையின்இன்று இழிபிறப்பு
உற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை உருவம் பெறுகஈங்கு இவர்எனச்
சாபவிடை செய்து, தவப்பெருஞ்
சிறப்பின்
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்
விளக்கவுரை :

