சிலப்பதிகாரம் 2461 - 2480 of 5288 அடிகள்



சிலப்பதிகாரம் 2461 - 2480 of 5288 அடிகள்

silapathikaram

2461. வையங் காவலர் மகிழ்தரும் வீதியும்
சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை
வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து
மாத்திரை யறிந்து மயங்கா மரபின்
ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும்
கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து
நால்வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும்

விளக்கவுரை :

[ads-post]

2471. வாரம் பாடுந் தோரிய மடந்தையும்
தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பட்டுக் கூத்தியும்
நால்வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தெண்கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅத்
தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு
அரும்பெறல் அறிவும் பெரும்பிறி தாகத்
தவத்தோ ராயினுந் தகைமலர் வண்டின்
நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும்
காம விருந்தின் மடவோ ராயினும்

விளக்கவுரை :

சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள், silappathikaaram, elango adikal, tamil books