3161. பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த்
திங்கள் முகிலொடுஞ் சேண்நிலம்
கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை
எங்கணா என்னா இனைந்தேங்கி
மாழ்குவாள்;
இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத்
துன்புறு வனநோற்றுத் துயருறு
மகளிரைப்போல்
மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப
அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண்
டழிவலோ;
நறைமலி வியன்மார்பின் நண்பனை
இழந்தேங்கித்
துறைபல திறமூழ்கித் துயருறு
மகளிரைப்போல்
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
3171. மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப
அறனென்னும் மடவோய்யான் அவலங்
கொண்டழிவலோ;
தம்முறு பெருங்கணவன் தழலெரி
யகமூழ்கக்
கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய
மகளிரைப்போல்
செம்மையின் இகந்தகோல் தென்னவன்
தவறிழைப்ப
இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி
அழிவலோ;
காணிகா,
வாய்வதின் வந்த குரவையின்
வந்தீண்டும்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க
விளக்கவுரை :