3341. கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி
கண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென்
ஆயுளென
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள்
நடுங்கிக்
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ
தில்லென்று
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
3351. இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.
வெண்பா
அல்லவை செய்தார்க் கறங்கூற்ற
மாமென்னும்
பல்லவையோர் சொல்லும்
பழுதன்றே--பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் றேவி
கடுவினையேன் செய்வதூஉங் காண்.
காவி யுகுநீருங் கையில்
தனிச்சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவும்--பாவியேன்
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங்
கண்டஞ்சிக்
கூடலான் கூடாயி னான்.
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
விளக்கவுரை :