3241. சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும்
உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும்
உண்டுகொல்
என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன்
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத்
தழீஇக்கொள்ள
நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம்
கன்றிய தென்றவள் கண்ணீர்கை
யான்மாற்ற
அழுதேங்கி நிலத்தின்வீழ்ந்
தாயிழையாள் தன்கணவன்
தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை
யாற்பற்றப்
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
3251. பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்
எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க
எனப்போனான்
மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர்
தெய்வங்கொல்
போயெங்கு நாடுகேன் பொருளுரையோ
இதுவன்று
காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக்
கைகூடேன்
தீவேந்தன் தனைக்கண்டித்
திறங்கேட்பல் யானென்றாள்
என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண்
நீர்சோர
நின்றால் நினைந்தாள் நெடுங்கயற்கண்
நீர்துடையாச்
சென்றால் அரசன் செழுங்கோயில்
வாயில்முன்.
விளக்கவுரை :