2981. நெய்ம்முறை நமக்கின் றாமென்று
ஐயைதன் மகளைக் கூஉய்க்
கடைகயிறு மத்துங் கொண்டு
இடைமுதுமகள் வந்துதோன்றுமன்;
உரைப்பாட்டு மடை
குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின்
மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு;
உறிநறு வெண்ணெய் உருகா உருகும்
மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு;
நான்முலை யாயம் நடுங்குபு
நின்றிரங்கும்
மான்மணி வீழும் வருவதொன் றுண்டு;
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
கருப்பம்
2991. குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின்
மடக்கண்ணீர் சோர்தலும் உறியில்
வெண்ணெ
யுருகாமையும் மறி முடங்கியாடாமையும்
மான்மணி
நிலத்தற்று வீழ்தலும் வருவதோர்
துன்பமுண்டென
மகளை நோக்கி மனமயங்காதே மண்ணின்
மாதர்க்கணியாகிய கண்ணகியுந்தான்காண
ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்
தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில் வேல்
நெடுங்கண்
பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும்
யாமென்றாள்
கறவை கன்று துயர் நீங்குகவெனவே;
விளக்கவுரை :