பெரும்பாணாற்றுப்படை
81 - 100 of 500 அடிகள்
81. முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை
வைப்பின் வியன்காட் டியவி
னீளரை
யிலவத் தலங்குசினை பயந்த
பூளையம்
பசுங்காய் புடைவிரிந் தன்ன
வரிப்புற
வணிலொடு கருப்பை யாடா
தியாற்றறல்
புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை
யன்ன வைந்நுதி நெடுந்தக
ரீத்திலை
வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை
மான்றோற்
பள்ளி மகவொடு முடங்கி
யீன்பிண
வொழியப் போகி நோன்கா
விளக்கவுரை :
91. ழிரும்புதலை யாத்த திருந்துகணை
விழுக்கோ
லுளிவாய்ச்
சுரையின் மிளிர மிண்டி
யிருநிலக்
கரம்பைப் படுநீ றாடி
நுண்பு
லடக்கிய வெண்ப லெயிற்றியர்
பார்வை
யாத்த பறைதாள் விளவி
னீழன்
முன்றி னிலவுரற் பெய்து
குறுங்கா
ழுலக்கை யோச்சி நெடுங்கிணற்று
வல்லூற்
றுவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க்
குழிசி முரியடுப் பேற்றி
வாரா
தட்ட வாடூன் புழுக்கல்
விளக்கவுரை :