பெரும்பாணாற்றுப்படை 101 - 120 of 500 அடிகள்



பெரும்பாணாற்றுப்படை 101 - 120 of 500 அடிகள்

101. வாடாத் தும்பை வயவர் பெருமக
னோடாத் தானை யொண்டொழிற் கழற்காற்
செவ்வரை நாடன் சென்னிய மெனினே
தெய்வ மடையிற் றேக்கிலைக் குவைஇநும்
பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர்
மானடி பொறித்த மயங்கதர் மருங்கின்
வான்மடி பொழுதி னீர்நசைஇக் குழித்த
வகழ்சூழ் பயம்பி னகத்தொளித் தொடுங்கிப்
புகழா வாகைப் பூவி னன்ன
வளைமருப் பேனம் வரவுபார்த் திருக்கு

விளக்கவுரை :

111. மரைநாள் வேட்ட மழுங்கிற் பகனாட்
பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையு
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக்
கடுங்கட் கானவர் கடறுகூட் டுண்ணு
மருஞ்சுர மிறந்த வம்பர்ப் பருந்துபட
வொன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி
வைந்நுதி மழுங்கிய புலவுவா யெஃகம்
வடிமணிப் பலகையொடு நிரைஇ முடிநாட்

விளக்கவுரை :

பெரும்பாணாற்றுப்படை, உருத்திரங் கண்ணனார், பத்துப்பாட்டு, perumpanatrupadai, uruthiran kannanaar, paththu paattu, tamil books