பெரும்பாணாற்றுப்படை
61 - 80 of 500 அடிகள்
61. முடலை யாக்கை முழுவலி மாக்கள்
சிறுதுளைக்
கொடுநுக நெறிபட நிரைத்த
பெருங்கயிற்
றொழுகை மருங்கிற் காப்பச்
சில்பத
வுணவின் கொள்ளை சாற்றிப்
பல்லெருத்
துமணர் பதிபோகு நெடுநெறி
யெல்லிடைக்
கழியுநர்க் கேம மாக
மலையவுங்
கடலவு மாண்பயந் தரூஉ
மரும்பொரு
ளருத்துந் திருந்துதொடை நோன்றா
ளடிபுதை
யரண மெய்திப் படம்புக்குப்
பொருகணை
தொலைச்சிய புண்டீர் மார்பின்
விளக்கவுரை :
71. விரவுவரிக் கச்சின் வெண்கை யொள்வாள்
வரையூர்
பாம்பிற் பூண்டுபுடை தூங்கச்
சுரிகை
நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக்
கருவி
லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட்
கடம்பமர்
நெடுவே ளன்ன மீளி
யுடம்பிடித்
தடக்கை யோடா வம்பலர்
தடவுநிலைப்
பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப்
பெரும்பழங் கடுப்ப மிரியற்
புணர்ப்பொறை
தாங்கிய வடுவாழ் நோன்புறத்
தணர்ச்செவிக்
கழுதைச் சாத்தொடு வழங்கு
விளக்கவுரை :