நற்றிணை 371 - 375 of 400 பாடல்கள்
371. முல்லை - ஒளவையார்
காயாங் குன்றத்துக் கொன்றை போல
மா மலை விடர் அகம் விளங்க மின்னி
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்
பெயல் தொடங்கினவே பெய்யா வானம்
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆயிழை அதன் எதிர்
குழல் தொடங்கினரே கோவலர்
தழங்கு குரல் உருமின் கங்குலானே
- வினை முற்றி மறுத்தராநின்றான்
பாகற்குச் சொல்லியது
விளக்கவுரை :
372. நெய்தல் - உலோச்சனார்
அழிதக்கன்றே தோழி கழி சேர்பு
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு
அன்ன வெண் மணற்று அகவயின் வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்தாங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு
இனையல் என்னும் என்ப மனை இருந்து
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழி நல் ஊரே
- மேல் இற்செறிப்பான் அறிந்து
ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச்
செறியார் எனச் சொல்லியது
விளக்கவுரை :
373. குறிஞ்சி - கபிலர்
முன்றிற் பலவின் படு சுளை மரீஇ
புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்
பா அமை இதணம் ஏறி பாசினம்
வணர் குரற் சிறு தினை கடிய
புணர்வதுகொல்லோ நாளையும் நமக்கே
- செறிப்பு அறிவுறீஇயது
விளக்கவுரை :
374. முல்லை - வன் பரணர்
முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை
வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்துஇழை அரிவைத் தேமொழி நிலையே
- வினை முற்றி மீள்வான் இடைச்
சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது
விளக்கவுரை :
375. நெய்தல் - பொதும்பில் கிழார் மகன்
வெண்கண்ணி
நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும்
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப
வருவைஆயினோ நன்றே பெருங் கடல்
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே
- வரையாது நெடுங்காலம் வந்தொழுக
தலைமகளது நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது
விளக்கவுரை :