நற்றிணை 366 - 370 of 400 பாடல்கள்



நற்றிணை 366 - 370 of 400 பாடல்கள்

366. பாலை - மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்துஇழை அல்குல் பெருந் தோட் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய கரும்பின்
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில்அம் கழைத் தூங்க ஒற்றும்
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி இவ் உலகத்தானே

- உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது

விளக்கவுரை :

367. முல்லை - நக்கீரர்

கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு
சூருடைப் பலியடு கவரிய குறுங் கால்
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும்
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி
மெல் இயல் அரிவை நின் பல் இருங் கதுப்பின்
குவளையடு தொடுத்த நறு வீ முல்லைத்
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை
இளையரும் சூடி வந்தனர் நமரும்
விரி உளை நன் மாக் கடைஇ
பரியாது வருவர் இப் பனி படு நாளே

- வரவு மலிந்தது

விளக்கவுரை :

368. குறிஞ்சி - கபிலர்

பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி
கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே
ஐய அஞ்சினம் அளியம் யாமே

- தோழி தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது

விளக்கவுரை :

369. நெய்தல் - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்

சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக
எல்லை பைபயக் கழிப்பி முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின் நன்றும்
அறியேன் வாழி தோழி அறியேன்
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன என்
நிறை அடு காமம் நீந்துமாறே

- பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது

விளக்கவுரை :

370. மருதம் - உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

வாராய் பாண நகுகம் நேரிழை
கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ் வரித்
திதலை அல்குல் முது பெண்டு ஆகி
துஞ்சுதியோ மெல் அம் சில் ஓதி என
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி
உள்ளினென் உறையும் எற் கண்டு மெல்ல
முகை நாண் முறுவல் தோற்றி
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே

- ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணர்க்குச் சொல்லியது முன் நிகழ்ந்ததனைப் பாணர்க்குச் சொல்லியதூஉம் ஆம்

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books