நற்றிணை 351 - 355 of 400 பாடல்கள்
351. குறிஞ்சி - மதுரைக் கண்ணத்தனார்
இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை
அருங்கடிப் படுத்தனை ஆயினும் சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய் பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி வேண்டு அன்னை கருந் தாள்
வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து
சிறு தினை வியன் புனம் காப்பின்
பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே
- தோழி அருகு அடுத்தது
விளக்கவுரை :
352. பாலை - மதுரைப் பள்ளிமருதங்கிழார்
மகனார் சொகுத்தனார்
இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை
அழல் போல் செவிய சேவல் ஆட்டி
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி
பச்சூன் கொள்ளை மாந்தி வெய்துற்று
தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அருஞ் சுரக் கவலை வருதலின் வருந்திய
நமக்கும் அரிய ஆயின அமைத் தோள்
மாண்புடைக் குறுமகள் நீங்கி
யாங்கு வந்தனள்கொல் அளியள் தானே
- பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச்
சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது
விளக்கவுரை :
353. குறிஞ்சி - கபிலர்
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல கணம் கொள
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
கல் கெழு குறவர் காதல் மடமகள்
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்
வான் தோய் வெற்ப சான்றோய்அல்லை எம்
காமம் கனிவதுஆயினும் யாமத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை
வெஞ் சின உருமின் உரறும்
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே
- தோழி ஆற்றது அருமை அஞ்சி தான்
ஆற்றாளாய்ச் சொல்லியது
விளக்கவுரை :
354. நெய்தல் - உலோச்சனார்
தான் அது பொறுத்தல் யாவது கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின்
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே
- தோழியால் செறிப்பு அறிவுறீஇ வரைவு
கடாயது மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தாற்கு மறுத்துச் சொல்லியதூஉம் ஆம்
விளக்கவுரை :
355. குறிஞ்சி - அறியப்படவில்லை
புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல் காந்தட்
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்
செம் முக மந்தி ஆரும் நாட
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில்
நெஞ்சின் இன்புறாய்ஆயினும் அது நீ
என் கண் ஓடி அளிமதி
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே
- தோழி அருகு அடுத்தது தோழி தலைமகளது
ஆற்றாமை கண்டு வரைவு கடாயதூஉம் ஆம்
விளக்கவுரை :