நற்றிணை 341 - 345 of 400 பாடல்கள்
341. குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்
வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து
அலையா உலவை ஓச்சி சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும்
துணை நன்கு உடையள் மடந்தை யாமே
வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென
நீர் இரங்கு அரை நாள் மயங்கி கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப
துணை இலேம் தமியேம் பாசறையேமே
- வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய
தலைமகன் சொல்லியது
விளக்கவுரை :
342. நெய்தல் - மோசி கீரனார்
மா என மதித்து மடல் ஊர்ந்து ஆங்கு
மதில் என மதித்து வெண் தேர் ஏறி
என் வாய் நின் மொழி மாட்டேன் நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு என்றும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய் என
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்
யானே எல்வளை யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்
என் எனப் படுமோ என்றலும் உண்டே
- குறை நேர்ந்த தோழி தலைமகளை
முகம்புக்க தன் சொல் கேளாது விடலின் இறப்ப ஆற்றான் ஆயினான் என உணர்ந்து
ஆற்றாளாய்த் தன்னுள்ளே சொல்லியது தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம்
புக்கலளாய் ஆற்றாது தன்னுள்ளே சொல்லியதூஉம் ஆம்
விளக்கவுரை :
343. பாலை - கருவூர்க் கதப்பிள்ளைச்
சாத்தனார்
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய
படையடு வந்த பையுள் மாலை
இல்லைகொல் வாழி தோழி நத்துறந்து
அரும் பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே
- தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச்
சொல்லியது
விளக்கவுரை :
344. குறிஞ்சி - மதுரை அறுவை வாணிகன்
இளவேட்டனார்
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம்ஆயின் ஆயிழை
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப
செல்வன் செல்லும்கொல் தானே உயர் வரைப்
பெருங் கல் விடரகம் சிலம்ப இரும் புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து
செந் தினை உணங்கல் தொகுக்கும்
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே
- தோழி சிறைப்புறமாகத் தலைமகன்
கேட்பச் சொல்லியது
விளக்கவுரை :
345. நெய்தல் - நம்பி குட்டுவனார்
கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல்
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன
வெளிய விரியும் துறைவ என்றும்
அளிய பெரிய கேண்மை நும் போல்
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட
நீடின்று விரும்பார் ஆயின்
வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தௌவே
- தௌ¢விடை
விலங்கியது
விளக்கவுரை :