நற்றிணை 336 - 340 of 400 பாடல்கள்
336. குறிஞ்சி - கபிலர்
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்
கல் அதர் அரும் புழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின்
ஈர் அளைப் புற்றம் கார் என முற்றி
இரை தேர் எண்கினம் அகழும்
வரை சேர் சிறு நெறி வாராதீமே
- ஆறு பார்த்துற்றுச்சொல்லியது
விளக்கவுரை :
337. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
உலகம் படைத்த காலை தலைவ
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே
முதிரா வேனில் எதிரிய அதிரல்
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால்
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே
- தோழி தலைமகன் பொருள்வயிற்
பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது தோழி உலகியல் கூறிப் பிரிவு
உணர்த்தியதூஉம் ஆம்
விளக்கவுரை :
338. நெய்தல் - மதுரை ஆருலவியநாட்டு
ஆலம்பேரிசாத்தனார்
கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர்
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா
இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை
நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
பயிர்தல் ஆனா பைதல்அம் குருகே
ஒருவழித் தணந்த காலை ஆற்றாத
- தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது
விளக்கவுரை :
339. குறிஞ்சி - சீத்தலைச் சாத்தனார்
தோலாக் காதலர் துறந்து நம் அருளார்
அலர்வது அன்றுகொல் இது என்று நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள்போலும் அன்னை சிறந்த
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ
மின் நேர் ஓதி இவளடு நாளை
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித்
தெண் நீர் மணிச் சுனை ஆடின்
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே
- சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச்
சொல்லியது
விளக்கவுரை :
340. மருதம் - நக்கீரர்
புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன்
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே
- பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத்
தலைமகள் நொந்து சொல்லியது
விளக்கவுரை :