நற்றிணை 326 - 330 of 400 பாடல்கள்
326. குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார்
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது
துய்த் தலை மந்தி தும்மும் நாட
நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ பல் நாள்
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண
வண்டு எனும் உணராவாகி
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே
- தோழி தலைமகனை வரைவுகடாயது
விளக்கவுரை :
327. நெய்தல் - அம்மூவனார்
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே காதல்அம் தோழி
அந் நிலை அல்லஆயினும் சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து
உலகம் கூறுவது உண்டு என நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ்
புன்னை ஓங்கிய கானற்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே
- வரையாது நெடுங்காலம் வந்தொழுக
ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது
விளக்கவுரை :
328. குறிஞ்சி - தொல் கபிலர்
கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி
சிற்சில வித்திப் பற்பல விளைந்து
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன்
பிறப்பு ஓரன்மை அறிந்தனம் அதனால்
அது இனி வாழி தோழி ஒரு நாள்
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு
பெரும் பெயல் தலைக புனனே இனியே
எண் பிழி நெய்யடு வெண் கிழி வேண்டாது
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல்
விலங்கு மலை அடுக்கத்தானும்
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே
- தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை
வற்புறுத்தது
விளக்கவுரை :
329. பாலை - மதுரை மருதங்கிழார் மகனார்
சொகுத்தனார்
வரையா நயவினர் நிரையம் பேணார்
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்
அத்தம் இறந்தனர் ஆயினும் நத் துறந்து
அல்கலர் வாழி தோழி உதுக் காண்
இரு விசும்பு அதிர மின்னி
கருவி மா மழை கடல் முகந்தனவே
- பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி
பருவம் காட்டி வற்புறுத்தது
விளக்கவுரை :
330. மருதம் - ஆலங்குடி வங்கனார்
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து
மட நடை நாரைப் பல் இனம் இரிய
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து
நாட் தொழில் வருத்தம் வீட சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும்
யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை
எம் மனைத் தந்து நீ தழீஇயினும் அவர்தம்
புன் மனத்து உண்மையோ அரிதே அவரும்
பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து
நன்றி சான்ற கற்பொடு
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே
- தோழி தலைமகனை வாயில் மறுத்தது
விளக்கவுரை :