நற்றிணை 301 - 305 of 400 பாடல்கள்
301. குறிஞ்சி - பாண்டியன் மாறன் வழுதி
நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்
மயில் ஓரன்ன சாயல் செந் தார்க்
கிளி ஓரன்ன கிளவி பணைத் தோள்
பாவை அன்ன வனப்பினள் இவள் என
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி
யாய் மறப்பு அறியா மடந்தை
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே
- சேட்படுத்து பிரிவின்கண் அன்பின்
இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையினான் என்று தோழி தன்னுள்ளே சொல்லியது
விளக்கவுரை :
302. பாலை - மதுரை மருதன் இளநாகனார்
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்
காடு கவின் பூத்தஆயினும் நன்றும்
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ
தாஅம் தேரலர்கொல்லோ சேய் நாட்டு
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே
- பருவம் கழிந்தது கண்டு தலைமகள்
சொல்லியது \
விளக்கவுரை :
303. நெய்தல் - மதுரை ஆருலவியநாட்டு
ஆலம்பேரி சாத்தனார்
ஒலி அவிந்து அடங்கி யாமம்
நள்ளென கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்
துஞ்சாக் கண்ணள் துயர் அடச் சாஅய்
நம்வயின் வருந்தும் நன்னுதல் என்பது
உண்டுகொல் வாழி தோழி தெண் கடல்
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே
- வேட்கை தாங்ககில்லாளாய்த்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்
விளக்கவுரை :
304. குறிஞ்சி - மாறோக்கத்து
நப்பசலையார்
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்
புணரின் புணருமார் எழிலே பிரியின்
மணி மிடை பொன்னின் மாமை சாய என்
அணி நலம் சிதைக்குமார் பசலை அதனால்
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே
- வரையாது நெடுங்காலம் வந்தொழுக
ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது
விளக்கவுரை :
305. பாலை - கயமனார்
வரி அணி பந்தும் வாடிய வயலையும்
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற
தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை நின் தோழி
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தௌ விளி
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கு இலை வெள் வேல் விடலையை
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே
- நற்றாய் தோழிக்குச் சொல்லியது மனை
மருட்சியும் ஆம்
விளக்கவுரை :