நற்றிணை 296 - 300 of 400 பாடல்கள்



நற்றிணை 296 - 300 of 400 பாடல்கள்

296. பாலை - குதிரைத் தறியனார்

என் ஆவதுகொல் தோழி மன்னர்
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மேதக மலரும்
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்
செல்ப என்ப காதலர்
ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே

- தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது

விளக்கவுரை :

297. குறிஞ்சி - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப
நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்
பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை
எவன்கொல் என்று நினைக்கலும் நினைத்திலை
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள் அன்னை
ஐயம் இன்றிக் கடுங் கவவினளே

- தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய் தலைமகன் கேட்பச் சொல்லி யது தோழி தலைமகளை அறத்தொடுநிலை வலிப்பித்ததூஉம் ஆம்

விளக்கவுரை :

298. பாலை - விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்

வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்
அருஞ் சுரக் கவலை அஞ்சுவரு நனந்தலைப்
பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள்
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும் ஒரு திறம்
பற்றாய் வாழி எம் நெஞ்சே நல் தார்ப்
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண்
ஒருமை செப்பிய அருமை வான் முகை
இரும் போது கமழும் கூந்தல்
பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோமற்றே

- தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங் கிச் சொல்லி தலைமகன் செலவு அழுங்கியது

விளக்கவுரை :

299. நெய்தல் - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

உரு கெழு யானை உடை கோடு அன்ன
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ
தயங்கு இருங் கோடை தூக்கலின் நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும் அவர்காண்
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ
வில் எறி பஞ்சி போல மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே

- தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது

விளக்கவுரை :

300. மருதம் - பரணர்

சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென அதன் எதிர்
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்
சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி எம்
முன் கடை நிறீஇச் சென்றிசினோனே
நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்
பிச்சை சூழ் பெருங் களிறு போல எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே

- வாயில் மறுத்தது வரைவு கடாயதூஉம் ஆம் மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு மருதத்துக் களவு

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books