நற்றிணை 291 - 295 of 400 பாடல்கள்



நற்றிணை 291 - 295 of 400 பாடல்கள்

291. நெய்தல் - கபிலர்

நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த இனக் குருகு
குப்பை வெண் மணல் ஏறி அரைசர்
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு நீயும்
கண்டாங்கு உரையாய் கொண்மோ பாண
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து
எல்லித் தரீஇய இன நிரைப்
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே

விளக்கவுரை :

- வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பு அறிந்து நெருங்கிச் சொல்லியது

விளக்கவுரை :

292. குறிஞ்சி - நல்வேட்டனார்

நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்
யாணர் வைப்பின் கானம் என்னாய்
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும்
கராஅம் பேணாய் இரவரின்
வாழேன் ஐய மை கூர் பனியே

- இரவுக்குறி மறுத்தது

விளக்கவுரை :

293. பாலை - கயமனார்

மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன்
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்
பூங் கண் ஆயம் காண்தொறும் எம்போல்
பெரு விதுப்புறுகமாதோ எம் இற்
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே

- தாய் மனை மருண்டு சொல்லியது அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉம் ஆம்

விளக்கவுரை :

294. குறிஞ்சி - புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்

தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ
மாயம் அன்று தோழி வேய் பயின்று
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும்
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைக் கோடு கண்டன்ன
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே

- மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது

விளக்கவுரை :

295. நெய்தல் - ஒளவையார்

முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள்
அருங் கடி அயர்ந்தனள் காப்பே எந்தை
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த
பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை
கலி மடைக் கள்ளின் சாடி அன்ன எம்
இள நலம் இற்கடை ஒழியச்
சேறும் வாழியோ முதிர்கம் யாமே

- தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது சிறைப்புறமும் ஆம்

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books