நற்றிணை 271 - 275 of 400 பாடல்கள்



நற்றிணை 271 - 275 of 400 பாடல்கள்

271. பாலை - அறியப்படவில்லை

இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி
பைந் தாது எருவின் வைகு துயில் மடியும்
செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய
செல் பெருங் காளை பொய்ம் மருண்டு சேய் நாட்டுச்
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர்
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று
வீ சுனைச் சிறு நீர் குடியினள் கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு
மா இருந் தாழி கவிப்ப
தா இன்று கழிக எற் கொள்ளாக் கூற்றே

- மனை மருண்டு சொல்லியது

விளக்கவுரை :

272. நெய்தல் - முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு
இருஞ் சேற்று அயிரை தேரிய தெண் கழிப்
பூஉடைக் குட்டம் துழவும் துறைவன்
நல்காமையின் நசை பழுதாக
பெருங் கையற்ற என் சிறுமை பலர் வாய்
அம்பல் மூதூர் அலர்ந்து
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே

- வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் சொல்லியது தோழி தலைமகளுக்குச் சொல்லுவாளாய் தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்

விளக்கவுரை :

273. குறிஞ்சி - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

இஃது எவன்கொல்லோ தோழி மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என
வேலன் உரைக்கும் என்ப ஆகலின்
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்
நெஞ்சு நடுக்குறூஉம் அவன் பண்பு தரு படரே

- தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய் நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக அவள் வேலனைக் கூவி வெறி அயரும் என்பது படச் சொல்லியது

விளக்கவுரை :

274. பாலை - காவன் முல்லைப் பூதனார்

நெடு வான் மின்னி குறுந் துளி தலைஇ
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து
உழை படு மான் பிணை தீண்டலின் இழை மகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்
எம்மொடு வருதியோ பொம்மல் ஓதி எனக்
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு
இரும் புலி வழங்கும் சோலை
பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே

- தோழி பருவம் மாறுபட்டது

விளக்கவுரை :

275. நெய்தல் - அம்மூவனார்

செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்
காணார் முதலொடு போந்தென பூவே
படையடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்
தன்னுறு விழுமம் அறியா மென்மெல
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு
யான் நினைந்து இரங்கேனாக நோய் இகந்து
அறனிலாளன் புகழ எற்
பெறினும் வல்லேன்மன் தோழி யானே

- சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து வற்புறுப்ப வன்புறை எதிர்மொழிந்தது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books