நற்றிணை 266 - 270 of 400 பாடல்கள்
266. முல்லை - கச்சிப்பேட்டு
இளந்தச்சனார்
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே
அதுவே சாலும் காமம் அன்றியும்
எம் விட்டு அகறிர்ஆயின் கொன் ஒன்று
கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு
இரீஇய காலை இரியின்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே
- தலைமகனைச் செலவுடன்பட்டது கடிநகர்
வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி நும்மாலே ஆயிற்று என்று சொல்லியதூஉம்
ஆம்
விளக்கவுரை :
267. நெய்தல் - கபிலர்
நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என
வாரேன்மன் யான் வந்தனென் தெய்ய
சிறு நா ஒண் மணித் தௌ இசை கடுப்ப
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல்
இவை மகன் என்னா அளவை
வய மான் தோன்றல் வந்து நின்றனனே
- தோழி காப்புக் கைமிக்குக் காமம்
பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது வரைவு கடாயதூஉம் ஆம்
விளக்கவுரை :
268. குறிஞ்சி - வெறி பாடிய
காமக்கண்ணியார்
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க
மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து
கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ
ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்
காதல் செய்தவும் காதலன்மை
யாதனிற்கொல்லோ தோழி வினவுகம்
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே
- தலைமகட்குச் சொல்லியது தலைமகன்
வந்தொழுகவும் வேறுபாடு கண்டாள் அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய் வெறி எடுத்துக்
கொள்ளும் வகையான் என்றதூஉம் ஆம்
விளக்கவுரை :
269. பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்
குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன்
மாலைக் கட்டில் மார்பு ஊர்பு இழிய
அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச்
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி
திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும்
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார்
சிறு பல் குன்றம் இறப்போர்
அறிவார் யார் அவர் முன்னியவ்வே
- தோழி வாயில் மறுத்தது செலவு
அழுங்குவித்ததூஉம் ஆம்
விளக்கவுரை :
270. நெய்தல் - பரணர்
தடந் தாள் தாழைக் குடம்பை நோனாத்
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி
உருள் பொறி போல எம் முனை வருதல்
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப்
பெருந் தோட் செல்வத்து இவளினும் எல்லா
எற் பெரிது அளித்தனை நீயே பொற்புடை
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே
மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே
- தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை
நெருங்கிச் சொல்லி வாயில் எதிர்கொண்டது உடனிலைக் கிளவி வகையால்
விளக்கவுரை :