திருமுருகாற்றுப்படை 261 - 280 of 317 அடிகள்



திருமுருகாற்றுப்படை 261 - 280 of 317 அடிகள்

261. மாலை மார்ப! நூலறி புலவி!
செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விஞ்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக!
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள!

விளக்கவுரை :

271. அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூஞ் சேஎய்!
மஞ்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி!
போர்மிகு பொருந! குரிசில்!. எனப்பல
யானறி அளவையின் ஏத்தி ஆனாது,
நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமை யோய்!.எனக்

விளக்கவுரை :

திருமுருகாற்றுப்படை, நக்கீரர், பத்துப்பாட்டு, thirumurukatrupadai, nakkeerar, paththu paattu, tamil books