நற்றிணை 251 - 255 of 400 பாடல்கள்
251. குறிஞ்சி - மதுரைப் பெருமருதிள
நாகனார்
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக்
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்
நல் மலை நாடனை நயவா யாம் அவன்
நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி
நின் புறங்காத்தலும் காண்போய் நீ என்
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய
பலி பெறு கடவுட் பேணி கலி சிறந்து
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்
தோடு இடம் கோடாய் கிளர்ந்து
நீடினை விளைமோ வாழிய தினையே
- சிறைப்புறமாகச் செறிப்பு
அறிவுறீஇயது
விளக்கவுரை :
252. பாலை - அம்மெய்யன் நாகனார்
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்
திறம் புரி கொள்கையடு இறந்து செயின அல்லது
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல் என
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த
வினை இடை விலங்கல போலும் புனை சுவர்ப்
பாவை அன்ன பழிதீர் காட்சி
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய்
நல் நாப் புரையும் சீறடி
பொம்மல் ஓதி புனைஇழை குணனே
- பொருள்வயிற் பிரியும் எனக் கவன்ற
தலைமகட்குத் தோழி சொல்லியது
விளக்கவுரை :
253. குறிஞ்சி - கபிலர்
புள்ளுப் பதி சேரினும் புணர்ந்தோர்க் காணினும்
பள்ளி யானையின் வெய்ய உயிரினை
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து
எனவ கேளாய் நினையினை நீ நனி
உள்ளினும் பனிக்கும் ஒள் இழைக் குறுமகள்
பேர் இசை உருமொடு மாரி முற்றிய
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி
பலவு உறு குன்றம் போல
பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே
- செறிப்பு அறிவிறீஇ வரைவு கடாயது
விளக்கவுரை :
254. நெய்தல் - உலோச்சனார்
வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும்
குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும்
துனி இல் நல்மொழி இனிய கூறியும்
சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்லச்
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த நீலக்
கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின்
துணை இலை தமியை சேக்குவை அல்லை
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி
வானம் வேண்டா உழவின் எம்
கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலின
- தோழி படைத்து மொழிந்தது
விளக்கவுரை :
255. குறிஞ்சி - ஆலம்பேரி சாத்தனார்
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை
கல் முகைச் சிலம்பில் குழுமும் அன்னோ
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர்
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்
திருமணி அரவுத் தேர்ந்து உழல
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே
- ஆறு பார்த்து உற்றது
விளக்கவுரை :