நற்றிணை 216 - 220 of 400 பாடல்கள்



நற்றிணை 216 - 220 of 400 பாடல்கள்

216. மருதம் - மதுரை மருதன் இளநாகனார்

துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்
கண்ணுறு விழுமம் கை போல் உதவி
நம் உறு துயரம் களையார்ஆயினும்
இன்னாதுஅன்றே அவர் இல் ஊரே
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையராயினும்
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே

- தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை பாணற்கு ஆயினும் விறலிக்குஆயினும் சொல்லுவாளாய் நெருங்கிச் சொல்லியது

விளக்கவுரை :

217. குறிஞ்சி - கபிலர்

இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும் கதழ் வாய் வேழம்
இருங் கேழ் வயப் புலி வெரீஇ அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன்
நனி பெரிது இனியனாயினும் துனி படர்ந்து
ஊடல் உறுவேன் தோழி நீடு
புலம்பு சேண் அகல நீக்கி
புலவி உணர்த்தல் வன்மையானே

- தலைமகள் வாயில் மறுத்தது

விளக்கவுரை :

218. நெய்தல் - கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்

ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே
எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே
வாவலும் வயின்தொறும் பறக்கும் சேவலும்
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தௌ த்தோர்
கூறிய பருவம் கழிந்தன்று பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்
ஆனா நோய் அட வருந்தி இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே

- வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது

விளக்கவுரை :

219. நெய்தல் - தாயங்கண்ணனார்

கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
பழ நலம் இழந்து பசலை பாய
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம்
புலவேன் வாழி தோழி சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்
தானே யானே புணர்ந்தமாறே

- வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

விளக்கவுரை :

220. குறிஞ்சி - குண்டுகட்பாலியாதனார்

சிறு மணி தொடர்ந்து பெருங் கச்சு நிறீஇ
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி
உண்ணா நல் மாப் பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்
பெரிதும் சான்றோர்மன்ற விசிபிணி
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்
ஊரேம் என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின் தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே

- குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம் ஆம்.தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம்

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books