நற்றிணை 221 - 225 of 400 பாடல்கள்
221. முல்லை - இடைக்காடனார்
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியடு தண் புதல் அணிய
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில்
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ
செல்க பாக நின் செய்வினை நெடுந் தேர்
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப்
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி
வந்தீக எந்தை என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே
- வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன்
பாகற்குச் சொல்லியது
விளக்கவுரை :
222. குறிஞ்சி - கபிலர்
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி பையென
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்
செலவுடன் விடுகோ தோழி பலவுடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது
பெருங் களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே
- தோழி தலைமகன் வரவு உணர்ந்து
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
விளக்கவுரை :
223. நெய்தல் - உலோச்சனார்
இவள்தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின்
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி
பகலும் வருதி பல் பூங் கானல்
இன்னீர்ஆகலோ இனிதால் எனின் இவள்
அலரின் அருங் கடிப் படுகுவள் அதனால்
எல்லி வம்மோ மெல்லம் புலம்ப
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து இவ் அம்பல் ஊரே
- பகற்குறி வந்து மீள்வானைத் தோழி
இரவுக்குறி நேர்வாள் போன்று அதுவும் மறுத்து வரைவு கடாயது
விளக்கவுரை :
224. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ
அன்பினர் மன்னும் பெரியர் அதன்தலை
பின்பனி அமையம் வரும் என முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே
புணர்ந்தீர் புணர்மினோ என்ன இணர்மிசைச்
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும்
இன்ப வேனிலும் வந்தன்று நம்வயின்
பிரியலம் என்று தௌ த்தோர் தேஎத்து
இனி எவன் மொழிகோ யானே கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே
- தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட
தலைமகள் பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு அறிவிலாதேம் என்னை சொல்லியும் பிரியார்
ஆகாரோ என்று சொல்லியது
விளக்கவுரை :
225. குறிஞ்சி - கபிலர்
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல் வரும் மால் வரை நாடனை
இரந்தோர் உளர்கொல் தோழி திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே
- வன்புறை எதிர் அழிந்தது பரத்தை
தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்
விளக்கவுரை :