கலித்தொகை 62 of 150 தொகைகள்


கலித்தொகை 62 of 150 தொகைகள்

62. ஏஎ! இஃது ஒத்தன், நாண் இலன் - தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும்;
மேவினும், மேவாக்கடையும் அஃது எல்லாம்
நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற
மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான்
புல் இனிது ஆகலின், புல்லினென்; - எல்லா!
தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று?

விளக்கவுரை :

சுடர் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றக் கேள்
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று
உண்பவோ, நீர் உண்பவர்?

விளக்கவுரை :

செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன் கொலோ -
ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா?
'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை
வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று;

விளக்கவுரை :

அறனும் அது கண்டற்று ஆயின், திறன் இன்றிக்
கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு
மாறு உண்டோ, நெஞ்சே! நமக்கு?

விளக்கவுரை :

கலித்தொகை, பெருங்கொடுங்கோன், கபிலர், மருதநிலங்கன், kalithogai, perungodungoan, kabilar, maruthanilangan, ettu thogai, tamil books