நற்றிணை 381 - 385 of 400 பாடல்கள்



நற்றிணை 381 - 385 of 400 பாடல்கள்

381. முல்லை - ஒளவையார்

அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை
யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே

- பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ வரவின்கண் சொல்லியது

விளக்கவுரை :

382. நெய்தல் - நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார

கானல் மாலைக் கழி நீர் மல்க
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்தி
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி
ஆர் உயிர் அழிவதுஆயினும் நேரிழை
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்த்
தண்ணம் துறைவன் நாண
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே

- ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது

விளக்கவுரை :

383. குறிஞ்சி - கோளியூர்கிழார் மகனார் செழியனார்

கல் அயற் கலித்த கருங் கால் வேங்கை
அலங்கல்அம் தொடலை அன்ன குருளை
வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென வயப் புலி
புகர் முகம் சிதையத் தாக்கி களிறு அட்டு
உரும் இசை உரறும் உட்குவரு நடு நாள்
அருளினை போலினும் அருளாய் அன்றே
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு
ஓங்கு வரை நாட நீ வருதலானே

- தோழி ஆறு பார்த்துற்றுச் சொல்லியது

விளக்கவுரை :

384. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

பைம் புறப் புறவின் செங் காற் சேவல்
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட
உயவு நடைப் பேடை உணீஇய மன்னர்
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம்
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்
பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோ
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு
அருந் துயர் உழந்த காலை
மருந்து எனப்படூஉம் மடவோளையே

- உடன் போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது

விளக்கவுரை :

385. நெய்தல் - அறியப்படவில்லை

எல்லை சென்றபின் மலரும் கூம்பின
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு
அலவனும் அளைவயிற் செறிந்தன கொடுங் கழி
இரை நசை வருத்தம் வீட மரமிசைப்
புள்ளும் பிள்ளையடு வதிந்தன அதனால்
பொழுதன்றுஆதலின் தமியை வருதி
எழுது எழில் மழைக்க - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - -

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books