நற்றிணை 206 - 210 of 400 பாடல்கள்



நற்றிணை 206 - 210 of 400 பாடல்கள்

206. குறிஞ்சி - ஐயூர் முடவனார்

துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ
செவ் வாய்ப் பாசினம் கவரும் என்று அவ் வாய்த்
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என
எந்தை வந்து உரைத்தனனாக அன்னையும்
நல் நாள் வேங்கையும் மலர்கமா இனி என
என் முகம் நோக்கினள் எவன்கொல் தோழி
செல்வாள் என்றுகொல் செறிப்பல் என்றுகொல்
கல் கெழு நாடன் கேண்மை
அறிந்தனள்கொல் அஃது அறிகலென் யானே

- தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது

விளக்கவுரை :

207. நெய்தல் - அறியப்படவில்லை

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி
வந்தனர் பெயர்வர்கொல் தாமே அல்கல்
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ
கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்
வலையும் தூண்டிலும் பற்றி பெருங் கால்
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே

- நொதுமலர் வரைவுழி தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது

விளக்கவுரை :

208. பாலை - நொச்சி நியமங் கிழார்

விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி
அறல் போல் தௌ மணி இடை முலை நனைப்ப
விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து
எவன் இனைபு வாடுதி சுடர் நுதற் குறுமகள்
செல்வார் அல்லர் நம் காதலர் செலினும்
நோன்மார் அல்லர் நோயே மற்று அவர்
கொன்னும் நம்புங் குரையர் தாமே
சிறந்த அன்பினர் சாயலும் உரியர்
பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள்
முடியாதுஆயினும் வருவர் அதன்தலை
இன் துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும் இப் பெரு மழைக் குரலே

- செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப தோழி சொல்லியது

விளக்கவுரை :

209. குறிஞ்சி - நொச்சி நியமங்கிழார்

மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டென பல விளைந்து
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்
மழலை அம் குறுமகள் மிழலைஅம் தீம் குரல்
கிளியும் தாம் அறிபவ்வே எனக்கே
படும்கால் பையுள் தீரும் படாஅது
தவிரும்காலைஆயின் என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே

- குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய் நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன்

விளக்கவுரை :

210. மருதம் - மிளைகிழான் நல்வேட்டனார்

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று தன் செய் வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே

- தோழி தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய் வாயில் நேர்ந்தது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books