கலித்தொகை 150 of 150 தொகைகள்
150.
அயம் திகழ் நறும் கொன்றை
அலங்கல் அம் தெரியலான்
இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்
வாயும்,
கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ
மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல்
மயங்கு அதர் மறுகலின், மலை தலைக்கொண்டென,
விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு
அரும் வெம் சுரம் -
விளக்கவுரை :
இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்,
அறம் துறந்து - ஆய் இழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்;
பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம்
பசந்து, நீ இனையையாய், நீத்தலும்
நீப்பவோ?
விளக்கவுரை :
கரி காய்ந்த கவலைத்தாய்க், கல்
காய்ந்த காட்டு அகம்,
'வெரு வந்த ஆறு' என்னார், விழுப்
பொருட்கு அகன்றவர்;
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்
உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ?
விளக்கவுரை :
கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக்
கொண்ட கோடையால்,
'ஒதுக்கு அரிய நெறி' என்னார், ஒண்
பொருட்கு அகன்றவர்;
புதுத் திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின்
கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ?
விளக்கவுரை :
ஆங்கு
அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
பெரும் தண் சண்பகம் போல, ஒருங்கு
அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் -
மை ஈர் ஓதி மட மொழியோயே!
விளக்கவுரை :
கலித்தொகை முற்றும்.